சத்தத்திலும் சொல் சுத்தத்திலும், கண் வட்டத்திலும் பல் பக்கத்திலும், என் ரத்ததிலும் உள் சித்தித்த்திலும், பிறக்கவில்லை இவை மொத்ததிலும் பிறந்தது எம்மிடம் தமிழ். - புத்தர் ஸ்ரீ
இன்பம், துன்பம், பழி, கடமை, பொன், பெண், ஆசை, பெருமை, பணம், பதவி, உண்மை, இளமை, தியானம், தவம், யோகம், பொறுமை அல்ல விட்டுக்கொடுப்பதாம் வாழ்க்கை என்பதன் பொருள். - புத்தர் ஸ்ரீ
சுதந்திர கடலில் இருந்திட நினைத்தோம் கடல்மேல் மானிடர் திரிந்திட கண்டோம், கயர்வலை கடல்மேல் வீசீன உடனே நண்பன் மாட்டிக்கொண்டான் வலைகளின் இடையே, இன்றே அனைவரையும் விட்டுவிடு, இல்லை நாளை என் நண்பம் உயிரை திருப்பி கொடு, விண்மீன்கள் ஏன் தூரே சென்றது காரணம் எனக்கு இன்றே புரிந்தது, மாட்டிக்கொண்டாள் மனிதன் கையில் வருத்து விடுவர் வாசனை நெய்யில், கவிஞர் சொல்லியும் திருந்த மனிதா மீனாய் பிறந்தால் புரியும் உனக்கு - புத்தர் ஸ்ரீ
மரணம் மரணம் ஞாயிறு காலை உணவாய் ஆனோம் மத்திய வேளை, தலையில்லாமல் தரையில் வீழ்ந்தோம் தோலில்லாமல் தலைகீழ் நின்றோம், உயிரை இழந்தும் வெட்ட பட்டோம் வெட்டின பிறகும் அடுப்பில் வெண்தோம், நாளை காலை இருப்போமா உயிரோடு மனிதன் வயிரெ எங்களுக்கு சுடுகாடு, தப்பிவிட்டால் இன்று மாலை மீண்டும் வருமே ஞாயிறு காலை. - புத்தர் ஸ்ரீ
இறைவன் எனை படைத்தான் உலகில் உயிர் கொடுத்தான், மனிதன் எனும் சாத்தான் உன் கண் முன் உயிர் எடுத்தான், வரும் நாளை தரும் காலை எண்கழுத்தில் பூ மாலை வரும் வேலை, பன்னீர் என பொழியும் சிறு தண்ணீர் என வழியும் இது வென்னீர் இல்லை கண்ணீர், சத்தம்மின்றி குளிரில் தலையாடும் யுத்தம்மின்றி ரத்தம் வழிந்தோடும், மனிதன் என பிறப்பேண் மீண்டும் ஜென்மம் எடுப்பேன், இறைவன் அன்று இருந்தால் உன் தலையை பலி கொடுப்பேண், ஜனனம் நீ எடுப்பாய் பலி ஆடாய் நீ பிறப்பாய், மரணம் வரும் தருணம் என இக்கவிதை நீ உரைப்பாய். - புத்தர் ஸ்ரீ
படைப்பவன் பலி கேட்பதில்லை அதை கொடுப்பவன் பசி மறப்பதில்லை, மிருகங்கள் அங்கு இறையாகுகின்றன அவை உனக்கு என்ன திரோகம் செய்தன, உயிர்களை கொல்வதை நிறுத்து இதை மற்றவனுக்கும் உணர்த்து, கொலை வெறியை மறந்து நல்லவனாக திருந்து. - புத்தர் ஸ்ரீ