Posts

Showing posts from September, 2010

தமிழ்

பிறப்பு என்றென்று தெரியாது, இறப்பு என்றும் கிடையாது, சித்திரை ஒன்று சிறந்த நாள், சந்தேகத்துடன் அன்று பிறந்த நாள், வருடத்தில் ஒருநாள் பிறந்தாலும், ஒவ்வொரு நாளும் அழிகின்றேன், நான்காம் சங்கம் வேண்டாம் என்னை வளர்க்க, நாளும் மறவாதீர் என்னை காக்க.. தமிழ்.. - புத்தர் ஸ்ரீ

வாழ்வில்..

தப்பேதும் செய்ததில்லை தலை குணிந்து நின்றதுண்டு, சோகமென்று எதுவும் இல்லை மகிழ்ச்சியின் தேடல் உண்டு, பகை என்றும் கண்டதில்லை உறவினிலே பிரிவும் உண்டு, சிற்றின்பம் வாழ்கை இல்லை அதையும் தாண்டி ஒன்றுண்டு, இறைவனை யவரும் கண்டதில்லை மனபார்வையிலே ஒருவன் உண்டு.. - புத்தர் ஸ்ரீ