கடவுள்
நதியிலும் வான்மதியிலும் ஒளியுளும் நெருப்பிலும் கண்டார் கடவுளை அதுவே மனிதனின் முதல்நிலை.. மண்ணிலும் கல்லிலும் உருவம் தரும் சிலையிலும் வைத்தான் கடவுளை செய்தான் ஒருநிலை.. முன்பிறந்தவர் பின்னின்றான் பன்சிறந்தவர் வழிசென்றான் கான்போர்நெஞ்சம் நடைபழகும் மூராம்நிலையில் முழு உலகம்.. கடவுள் என்று ஒன்றுஇல்லை அறிவே கடவுள் வேருஇல்லை நான்காம் நிலையின் பெருமிதம் பகுத்தறிவாளரின் பிடிவாதம்.. தன்னை உணர்ந்த மனிதன் தானும் கடவுள் என்பவன் ஆத்மா என்னும் உயிரே இதுவே ஐந்தாம் நிலையே.. ஆறாம் நிலையை அறியும்முன் உந்தன் நிலையை அறிவாயே ஞானம் வந்தால் அறிவிலே கடவுளை நீயும் உணர்வாயே.. - புத்தர் ஸ்ரீ