விழுந்தேன் கவிஞனாய்
புவி இசை கண்டு.. விழுந்தேன் கவிஞனாய் இசை ருசி கொண்டு.. விழுந்தேன் கவிஞனாய் இசைதாய் பாதம் தொட்டு.. விழுந்தேன் கவிஞனாய் என் தாயின் கருவில்.. பிறந்தேன் மனிதனாய்.. கம்பன் கவி கண்டு.. விழுந்தேன் கவிஞனாய் குறளின் பொருள் கொண்டு.. விழுந்தேன் கவிஞனாய் சங்க தமிழ் உண்டு.. விழுந்தேன் கவிஞனாய் தமிழ் தாயின் மடியில்.. விழுந்தேன் கவிஞனாய்..! எழுந்தேன் கவிதையாய்!! - புத்தர் ஸ்ரீ