Posts

Showing posts from April, 2009

யாரென்று தேடினேன்

கறை படா கரங்களும் சிறை படா நெஞ்சமும், குறை கானா தேகமும் மறை கானா பார்வையும், உண்டென்று தேடினேன் யாரென்று வாடினேன்.. பழி கொண்ட சூழலும் பிழை கண்ட சுற்றமும், திரை கொண்ட உள்ளமும் நெறி கண்ட கொள்கையும், வண்டென்று வந்தது தடைபோட்டு நின்றது.. பால் போன்ற பதுமையும் பனி போன்ற தன்மையும், பூ போன்ற மென்மையும் உள்ள ஒரு பெண்ணை, கண்டால் சொல்வீர் நன்றியை வெல்வீர்.. - புத்தர் ஸ்ரீ

நான் செய்த தவறல்ல

கோழியில் அங்கமானேன் திருகப்பட்டேன் அது நான் செய்த தவறல்ல, ஆடில் அங்கமானேன் அருக்கப்பட்டேன் அது நான் செய்த தவறல்ல, மாடில் அங்கமானேன் வெட்டப்பட்டேன் அது நான் செய்த தவறல்ல, மனிதனில் அங்கமானேன் இருக்கப்பட்டேன் அது நான் செய்த தவறல்ல தான் செய்த தவறு.. - புத்தர் ஸ்ரீ

யார் புத்தர் ஸ்ரீ

தமிழ் படித்தேன் தமிழ் படித்தேன் தமிழ்த் தாயின் தலைமகன் நான், சொர்ப்படைதேன் பொருள்ப் படைத்தேன் கவி படைக்கும் கவிஞன் நான், இயல் தொடுத்தேன் இசை கொடுத்தேன் இசை பாடும் கலைஞன் நான், தடம் அறிந்தேன் படம் வரைந்தேன் ஓசையில்லா ஓவியன் நான், ஒழக்கம் கொண்டேன் நேர்மை கண்டேன் கலியுகத்தில் யார் நான்.. - புத்தர் ஸ்ரீ