யாரென்று தேடினேன்

கறை படா கரங்களும்
சிறை படா நெஞ்சமும்,
குறை கானா தேகமும்
மறை கானா பார்வையும்,
உண்டென்று தேடினேன்
யாரென்று வாடினேன்..

பழி கொண்ட சூழலும்
பிழை கண்ட சுற்றமும்,
திரை கொண்ட உள்ளமும்
நெறி கண்ட கொள்கையும்,
வண்டென்று வந்தது
தடைபோட்டு நின்றது..

பால் போன்ற பதுமையும்
பனி போன்ற தன்மையும்,
பூ போன்ற மென்மையும்
உள்ள ஒரு பெண்ணை,
கண்டால் சொல்வீர்
நன்றியை வெல்வீர்..

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்