இவன் உலகன்
பறவைகள் பாஸ்போர்ட் எடுக்காது
சிறகுகள் ஓய்வும் எடுக்காது
வலசை போதலுக்கு விசா கிடையாது
வெளிநாடென்று ஒன்றும் கிடையாது
திசைகள் அனைத்தும் நம்முலகம்
இசைகள் படிக்கும் நம்பயணம்
காற்றும் நீரும் நம்முணவு
போகும் இடம்தான் நம்கனவு
வாழ்வின் அர்த்தம் புரிந்தவன்
மனதின் கவலைகள் மறந்தவன்
உலகியல் உணர்ந்த உள்ளழகன்
உலகவியல் பேசும் இவன் உலகன்
- புத்தர் ஸ்ரீ
Comments