Posts

இவன் உலகன்

பறவைகள் பாஸ்போர்ட் எடுக்காது  சிறகுகள் ஓய்வும் எடுக்காது வலசை போதலுக்கு விசா கிடையாது  வெளிநாடென்று ஒன்றும் கிடையாது  திசைகள் அனைத்தும் நம்முலகம் இசைகள் படிக்கும் நம்பயணம்  காற்றும் நீரும் நம்முணவு  போகும் இடம்தான் நம்கனவு வாழ்வின் அர்த்தம் புரிந்தவன்   மனதின் கவலைகள் மறந்தவன்  உலகியல் உணர்ந்த உள்ளழகன்  உலகவியல் பேசும் இவன் உலகன் - புத்தர் ஸ்ரீ  

வேற்றிடம் பாரென்றார்

பிள்ளைகள் பலவாயினும்  வேற்றுமையில் வேர் ஊறி, தொல்லைகள் தொலைந்திடவே  வேற்றிடம் பாரென்றார்! பேரனும் பேத்தியும் தூரமாய் நில் என,  வீட்டிற்குள் சேர்க்கவே  கூட்டமாய் மறுக்கின்றார்! அடைக்கலம் அடைந்திட  இலவச விடுதியே, விடைதரும் வேளையில் நடையின்றி காத்திருக்க! உலகனின் வாசலில்  ஒரு மனம் நொந்ததே  மறு வழி தெரியாமல் தலை குனிந்து நின்றதே!! 

எதை கொண்டு வந்தோம்? எதை கொண்டு செல்வோம்?

பிண்டமாய் உயிர்த் து எ ழுந்து  மாதமாய் ஐந் து   இ ரண்டு  மீதமாய் வளர்ந்து வந்து  பாகமாய் பன் இரண்டு  கொண்டு வந்த து   எ துவுமில்லை  என்று சொல்ல எவருமில்லை  தேகமும் ஆசையும் நாம்  கொண்டு வந்த உடமையே ! தெண்டமாய் வாழும் வாழ்வை  பருவமாய் தினம் மலர்ந்து  வருடமாய் பல கடந்து  நிமிடமாய் பிரியும் உடலை  கொண்டு செல்ல  எதுவுமில்லை  என்று சொல்ல எவருமில்லை  அனுபவமும் ஞாபகமும் நாம்  கொண்டு செல்லும்  உடமையே ! - புத்தர் ஸ்ரீ 

கொரோனா கவிதை

ஆடு மாடு கோழியோ பாம்பு பன்றி பல்லியோ எதை கொன்று வந்ததோ எந்த பாவி தின்றதோ ஒருவனிடம் தோன்றியே உலகம் எங்கும் பரவியே ஆலயங்கள் மூடியே அறிவியலை நம்பியே அடைத்து வைத்த உயிர்களின் உள் உணர்வை கருதியே தோற்றம் கண்ட கிருமியே அடைந்தோம் நாங்கள் வீட்டிலே மாசு வெப்பம் குறைக்கவே மனிதன் மறந்த வரிகளே மனித இன தோற்றமே மற்ற உயிரை காக்கவே -- புத்தர் ஸ்ரீ

நீர் வெற்றி தரும்

நீரின்றி அமையாது உலகு உலகின்றி இருக்காது உழவு உழவின்றி கிடைக்காது உணவு உணவின்றி பிறக்காது உயிர் உயிரின்றி தோன்றாது வலி வலியின்றி இருக்காது வாழ்க்கை வாழ்வின்றி அடையாது உணர்வு உணர்வின்றி நெருங்காது வெற்றி - புத்தர் ஸ்ரீ

யார் தமிழ் கடவுள்?

சங்க தமிழ் படைக்க முன் நின்றான் முருகன் பிறப்பாலும் தாய்மொழியாலும் அவன் இல்லை தமிழன் வையகம் முழுதும் தேடினேன் தெய்வங்கள் எங்கெங்கு தமிழ் மண்ணில் தோன்றிய இறைவன் யார் இங்கு ஔவை தமிழ் போற்றிய ஆண்டியே தமிழுக்கு கடவுள் கோதை தமிழ் பாடிய  ஆண்டாளே தமிழ் கடவுள்  இதை மறைத் தாலும் உண்மை இது தான் எவர் மறுத் தாலும் அவர் சொல்வது பொய் தான் - புத்தர் ஸ்ரீ

என் போல் தமிழன்

தாய் வழி சோழன் தந்தை வழி பாண்டியன் பிறப்பில் பல்லவன் வளர்ப்பில் சேரன் என் போல் தமிழன் உலகினில் இல்லை தாய் தமிழ் வளர்ப்பான் தமிழ் தாய்யின் பிள்ளை உணவில் சைவம் மனதில் வைணவம் புத்தியில் புத்தம் சித்தியில் சமணம் என் போல் மனிதன் வாழ்ந்திட வேண்டும் கொள்கை இதுவென்று பரப்பிட வேண்டும் யாதும் ஊரே யாவரும் கேளீர் பாரினை சுற்றிட என்னுடன் வாரீர் தமிழனின் பெருமை கோவிலில் தெரியும் மதம் நீயும் மாறினால் எப்படி புரியும் - புத்தர் ஸ்ரீ