எதை கொண்டு வந்தோம்? எதை கொண்டு செல்வோம்?
பிண்டமாய் உயிர்த்து எழுந்து
மாதமாய் ஐந்து இரண்டு
மீதமாய் வளர்ந்து வந்து
பாகமாய் பன் இரண்டு
கொண்டு வந்தது எதுவுமில்லை
என்று சொல்ல எவருமில்லை
தேகமும் ஆசையும் நாம்
கொண்டு வந்த உடமையே !
தெண்டமாய் வாழும் வாழ்வை
பருவமாய் தினம் மலர்ந்து
வருடமாய் பல கடந்து
நிமிடமாய் பிரியும் உடலை
கொண்டு செல்ல எதுவுமில்லை
என்று சொல்ல எவருமில்லை
அனுபவமும் ஞாபகமும் நாம்
கொண்டு செல்லும் உடமையே !
- புத்தர் ஸ்ரீ
Comments