ஏறுதழுவி ஆடுவோம் பார்முழுதும் காட்டுவோம்

எங்கள் வீட்டில் ஒருவனாய்
வளர்த்து வந்த ஜீவனை
இறக்கமின்றி கொன்றிடும்
கயவர்கள் உலகிலே

உயிரினத்தின் சக்தியை
மனிதனிடம் காட்டிட
மோதி விளையாடிடும்
நான்கு கால் நண்பனை

பிள்ளைபோல பார்த்திடும்
உழவர் திருநாட்டிலே
ஏறுதழுவி ஆடுவோம்
தை திருநாளிலே

வெற்றி கொண்ட காளையை
வீரன் என்று போற்றுவோம்
தோல்வி கண்ட மாட்டைவைத்து
வயக்காட்டை உழவுவோம்

ஆயுதங்கள் இன்றியே
ஆடும் இந்த ஆட்டத்தை
தடை செய்ய கூறிட
யாருக்கென்ன அருகதை

காட்சி அல்ல காளைகள்
வேண்டாம் இந்த அரசியல்
துடிக்க வேண்டும் நம்சதை
தடுக்க வேண்டும் பசுவதை

தமிழினத்தின் வீரத்தை
பார்முழுதும் காட்டுவோம்
காளை எங்கள் சின்னமென்று
நாட்டின் கொடி ஏற்றுவோம்

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்