மறுத்தாய் எனை பெற்றெடுக்க

மறுத்தாய் எனை பெற்றெடுக்க
மருந்தாய் எமன் வந்துநிற்க
களைக்கும் கய நெஞ்சம்
கருணை வர அஞ்சும்

இருந்தேன் சதை வடிவில்
இறந்தேன் சில நொடியில்
நின்றது என் சுவாசம்
கொன்றது தாய் பாசம்

உருவம் எனக்கு இல்லை
உலகில் இடம் இல்லை
உன் தாய்போல் நீ சுவாசி
மறுகணம் நீ யோசி

உடலில் ஓர் உயிர்த்துடிக்க
அடைவேன் அவள் வாழ்செழிக்க
விருந்தாய் நான் வந்திருக்க
மறு தாய் எனை பெற்றெடுக்க

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்